TNPSC Thervupettagam

நிதிக்கொள்கைக் குழு (MPC)

July 25 , 2017 2720 days 1150 0
  • அரசின் அறிவிப்பின்படி பணவீக்கஇலக்கு 4%ஆகும். இதில் 2% அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பணவீக்கம் இருப்பது வரையறை. இந்த இலக்குகளை அடையத்தகுந்தாற் போல் மீள்வாங்கல் வீதத்தை நிர்ணயிப்பது-குழுவின் பொறுப்பு ஆகும்.
  • நிதிக்கொள்கைக் குழு ஆறு உறுப்பினர்களைக் கொண்டது. இதில் மூன்று உறுப்பினர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் உறுப்பினர்கள் ஆவர். மீதம் உள்ள மூன்று உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கிறது.
  • இந்தக் குழு ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் நான்கு முறையாவது சந்திக்க வேண்டும்.
  • மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்நான்கு ஆண்டுகாலத்திற்கோ அல்லது அதற்கு அடுத்தகட்டளைகள் வரும் வரையிலோ (எது முன்பு வருகிறதோ ) பதவியில் இருக்கலாம்.
  • எம்.பி.சி-யின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒருவாக்கு உண்டு. சமமான வாக்குகள் வரும் சூழலில் ரிசர்வ் வங்கி கவர்னர் அறுதி வாக்கினை (casting vote) அளிப்பார்.
  • அனைத்து உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்களையும் பொறுப்புகளையும் வெளிப்படுத்த வேண்டும். மேலும் ஆண்டிற்கு ஒருமுறை இத்தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும்
  • பணவீக்க இலக்கை வங்கிஅடையத் தவறிய தேதி முதல் ஒரு மாதத்திற்குள் நிதிக்கொள்கைக் குழு மத்திய அரசாங்கத்திற்கு அறிக்கைசமர்ப்பிக்க வேண்டும்.
  • குழு உறுப்பினர்கள், குழுவின் கூட்டத்திற்கு முன்னும் பின்னும் அமைதி/ இரகசியம் காக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்