இந்திய ரிசர்வ் வங்கியானது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 முதல் மார்ச் 01 ஆம் தேதி வரை இத்தினத்தினை அனுசரித்து வருகிறது.
நிதிசார் செயல்பாடுகளில் பொறுப்புமிக்க வகையில் ஈடுபடுவதற்கும், தகவலறிந்து நிதிசார் முடிவுகளை எடுப்பதற்கும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக நிதிக் கல்வி சார் தகவல்களைப் பொதுமக்களிடம் பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டு நிதிசார் கல்வியறிவு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "சரியான தொடக்கத்தை உருவாக்குதல்: நிதி ரீதியான திறன் கொண்டிருத்தல்" என்பதாகும்.