TNPSC Thervupettagam

நிதிச் சேவை நிறுவனங்கள் வாரியம்

July 6 , 2022 873 days 425 0
  • மத்திய அரசானது "வங்கிகள் குழு வாரியத்தினை (BBB)" "நிதிச் சேவைகள் நிறுவனங்கள் வாரியமாக (FSIB)" மாற்றியுள்ளது.
  • நிதிச் சேவை நிறுவனங்கள் வாரியத்தின் ஆரம்பக் கட்டத் தலைவராக பானு பிரதாப் சர்மாவை நியமிப்பதற்கு அமைச்சரவையின் நியமனக் குழுவானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இவர் இரண்டு ஆண்டு காலத்திற்கு இப்பதவியில் பணியாற்றுவதற்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இவர் வங்கிகள் குழு வாரியத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றினார்.
  • நிதிச் சேவைகள் நிறுவனங்கள் வாரியமானது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் முழுநேர இயக்குநர்கள் மற்றும் நிர்வாகம் சாராதத் தலைவர்களின் நியமனங்களுக்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும்.
  • பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் தலைமை மேலாளர்கள் மற்றும் இயக்குநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்களும் தற்போது நிதிச் சேவைகள் நிறுவனங்கள் வாரியத்தின் ஒரு பணியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்