இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஆனது, பரஸ்பர நிதிகளின் சிறு தொகுப்பு ('சேச்சிடேஷன்') குறித்த ஆலோசனைக் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இது குறைந்த வருமானம் கொண்ட பிரிவினரும் பரஸ்பர நிதிகளை அணுகுவதை அதிகரிப்பதையும் அவர்களின் பங்கேற்பை மிக எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட ள்ளது.
SEBI வாரியமானது, சுமார் 250 ரூபாய் மதிப்பிலான சிறு முதலீடு சார்ந்த முறைசார் முதலீட்டுத் திட்டம் (SIP) என்ற ஒரு சிறு தொகுப்பு பரஸ்பர நிதித் தயாரிப்பை முன் மொழிந்துள்ளது.
மேலும், கடன் பத்திரங்கள், துறைசார் மற்றும் குறிப்பிட்ட துறை சார்ந்தத் திட்டங்கள், பங்கு சார் திட்டப் பிரிவின் கீழான சிறிய மற்றும் நடுத்தர வரம்புத் திட்டங்கள் தவிர வேறு எந்த திட்டத்திலும் சிறு முதலீடு SIP சேவைகளை வழங்க முடியும்.
பரஸ்பர நிதிகளின் சிறு தொகுப்பானது, பரஸ்பர நிதிகளில் படிப்படியாக மிகச் சிறிய தொகை சார்ந்த முதலீட்டை செயல்படுத்தும்.