நிதித்துறையைப் பசுமை மயமாக்குவதற்கான பிணையம்
May 3 , 2021
1304 days
581
- சமீபத்தில் நிதித்துறையைப் பசுமை மயமாக்குவதற்கான பிணையத்தில் (Network Greening the Financial System – NGFS) இந்திய ரிசர்வ் வங்கி இணைந்துள்ளது.
- இதில் இணைவதன் மூலம், இந்திய ரிசர்வ் வங்கியானது உலகளாவிய காலநிலை ஆபத்து மேலாண்மையில் பங்களிப்பதற்கும் அதிலிருந்து சில கருத்துகளை கற்பதற்கும் இயலும்.
- இறுதியாக, நீடித்தப் பொருளாதாரம் நோக்கிய மாற்றத்தை அடைவதற்கு RBI உலக நாடுகளுடன் இணைந்து செயல்படும்.
- நிதித்துறையைப் பசுமைமயமாக்குவதற்கான பிணையத்துடன் 83 மத்திய வங்கிகள் ஈடுபட்டுள்ளன.
- இவற்றுள் 75 நாடுகள் உறுப்பினராகவும் 13 நாடுகள் பார்வையாளர் நாடுகளாகவும் (Observer) உள்ளன.
- பசுமை நிதியத்தை அதிகரிப்பதும் விரைவாக ஏற்படுத்தச் செய்வதுமே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
- நிதித்துறையில் காலநிலை கொள்கைகளை ஏற்படுத்தவும் காலநிலை ஆபத்துக் கால நெகிழ்திறனை மேம்படுத்தவும் உறுப்பினர்களுக்கு உதவுவதே இதன் நோக்கம் ஆகும்.
Post Views:
581