2020 - 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார்.
இந்த நிதிநிலை அறிக்கையானது பின்வரும் மூன்று முக்கிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டது. அவையாவன:
இந்தியாவின் இலக்கு.
அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி.
சமூக நலன் - மனிதாபிமானம் மற்றும் இரக்கம்.
நிதிநிலை அறிக்கை
இந்தியாவின் நிதிநிலை அறிக்கை என்பது நாட்டின் விரிவான வருடாந்திர நிதிநிலை அறிக்கையாகும்.
மத்திய நிதிநிலை அறிக்கையானது அரசாங்கத்தின் நிதி, அதன் வருவாய் மற்றும் செலவுகள் ஆகியவை பற்றிய விரிவான கணக்கைக் கொண்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் 112வது சரத்தில் குறிப்பிட்டுள்ள படி,
ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை, அந்த ஆண்டிற்கான அதன் மதிப்பிடப்பட்ட ரசீதுகள் மற்றும் செலவினங்களின் அறிக்கையை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் சமர்ப்பிக்கின்றது.
சிறப்பம்சங்கள்
மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை இந்தியா தற்பொழுது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கின்றது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இயல்பு வளர்ச்சி - 10% (2020-21).
நிதிப் பற்றாக்குறை - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8% (2019-20), மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5% (2020-21).
வருவாய்ப் பற்றாக்குறை - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7% (2020-21).
15வது நிதி ஆணையமானது மாநிலங்களுக்கான மத்திய வரிகளின் மாநிலப் பங்கை ஒரு சதவீதம் குறைத்து 41% ஆக குறைத்துள்ளது.
புதிய வரி உச்ச வரம்புகள் மற்றும் குறைந்த வருமான வரி விகிதங்கள்.
மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு 5% சுகாதாரத் தீர்வை விதிக்கப் படும்.
வேளாண்மை தொடர்பான 16 செயல் திட்டங்களுக்கு ரூ. 2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
வங்கி வைப்புக் காப்பீட்டுத் தொகையானது ஒரு வைப்புத் தொகைதாரருக்கு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.