இந்திய ரிசர்வ் வங்கியானது தனது 23வது நிதி நிலைத்தன்மை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இது ஒரு ஆண்டிற்கு இருமுறை வெளியிடப் படுகிறது.
இந்தியாவின் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன் விகிதமானது 2021-22 ஆம் ஆண்டின் இறுதியில் 11.2% வரை உயரக் கூடும்.
இது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 7.48% ஆக இருந்தது.
அடித்தள வரம்புகளை வைத்து பார்க்கும் போது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பட்டியலிடப் பட்ட வணிக வங்கிகளின் மொத்த வாராக்கடன் விதிதமானது 9.8% ஆக உயரக்கூடும்.
இந்த அறிக்கையானது நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி மன்றத்தினால் (Financial Stability and Development Council) வெளியிடப் படுகிறது.
இந்தச் சபையின் தலைவர் மத்திய நிதி அமைச்சராவார்.
இந்தச் சபையினை உருவாக்குவது பற்றிய கருத்தானது 2008 ஆம் ஆண்டில் ரகுராம் ராஜன் குழுவினால் பரிந்துரைக்கப் பட்டது.