மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகமானது கோவிட் – 19 நோய் வெடிப்பின் பின்னணியின் காரணமாக கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நிதியினை மாற்றியுள்ளது.
கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.52,000 கோடி நிதியை மாற்றுமாறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை மத்தியத் தொழிலாளர் நலத் துறை அமைச்சகமானது அறிவுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையானது கட்டிடம் மற்றும் இதரக் கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம், 1996ன் பிரிவு 60ன் படி இந்த அமைச்சகத்தினால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ், செஸ் (cess) ஆனது அரசாங்கத்தின் கட்டுமானப் பணியில் பணியாற்றும் அல்லது இதர பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து முதலாளிகளிடமிருந்தும் வசூலிக்கப் படுகின்றது.