இந்திய அரசானது 2018-19 ஆம் நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை இலக்கை அடையத் தவறிவிட்டது.
2018 ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவிகிதமாகும். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட நிதிப் பற்றாக் குறையின் இலக்கு 3.2 சதவிகிதமாகும்.
திருத்தப்பட்ட மதிப்பீட்டில் முழு ஆண்டிற்கான நிதிப் பற்றாக் குறையானது ரூ. 6.34 லட்சம் கோடி இருக்க வேண்டும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்பொழுது நிதிப் பற்றாக்குறையின் மதிப்பு ரூ. 8.51 லட்சம் கோடியாக இருக்கிறது.
எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவான வரி வசூலிப்பு மற்றும் தொடர் அரசாங்கச் செலவினங்கள் ஆகியவை இந்த நிதிப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணங்களாகும்.
அடுத்த ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறையின் இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவிகிதமாகும்.