TNPSC Thervupettagam

நிதியியல் கட்டுப்பாட்டுக் குழு

April 2 , 2019 1936 days 622 0
  • நிதியியல் விதிகளை அமல்படுத்துவதற்காகவும் பொதுக் கடன்களை சிறந்த முறையில் நிர்வகிப்பதற்காகவும் நிதியியல் ஒழுங்கு ஆணையத்தை அமைப்பதற்கான அவசியத்தை 15-வது நிதி ஆணையத்தின் தலைவரான K. சிங் வலியுறுத்தியுள்ளார்.
  • அரசியலமைப்பின் பிரிவு 293(3) ஆனது மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கான ஒரு உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது. அந்த உச்ச வரம்பிற்கு மேல் மாநில அரசுகள் கடன் வாங்கக் கூடாது.
  • ஆனால் மத்திய அரசானது தான் கடன் வாங்கும் நிதிக்கான எந்தவொரு அரசியலமைப்புக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் கடனானது 70 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது.
  • நிதியியல் விதிகளை அமல்படுத்துவதற்காகவும் மத்திய அரசின் நிதியியல் ஒருங்கிணைப்பைக் கண்காணிப்பதற்காகவும் நிதியியல் ஒழுங்கு ஆணையம் போன்ற ஒரு நிறுவன அமைப்பு தேவைப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்