நிதியியல் கல்வி வாரமானது ஒவ்வொரு ஆண்டும் ஒரு முக்கியத் தலைப்புகளின் கீழ் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ரிசர்வ் வங்கியின் மையப்படுத்தப்பட்டப் பிரச்சாரமாகும்.
இவ்வருட நிதியியல் கல்வி வாரமானது ‘விவசாயிகள்’ மீதும் முறையான வங்கி அமைப்பின் ஒரு அங்கமாக இருப்பதன் மூலம் அவர்கள் எவ்வாறு பயன் பெறுகிறார்கள் என்பதனை விளக்குவதன் மீதும் மையம் கொண்ட கருத்துருவை அடிப்படையாகக் கொண்டது.
விவசாயிகளுக்கு அத்தியாவசிய நிதியியல் விழிப்புணர்வுச் செய்திகளைப் பரப்புவதற்காக RBI வங்கியானது ஜூன் மாதத்தில் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவற்றின் மூலம் மையப்படுத்தப்பட்ட வெகு ஜன ஊடகப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.