இந்திய ரிசர்வ் வங்கியானது ஜூன் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நாடு முழுவதும் நிதியியல் கல்வியறிவு வாரத்தை (Financial Literacy Week) ஒருங்கிணைக்க உள்ளது.
இந்த வருடத்திற்கான நிதியியல் கல்வியறிவு வாரத்தின் கருப்பொருள் நுகர்வோர் பாதுகாப்பு (Customer Protection).
வங்கி வாடிக்கையாளர்களிடையே நிதியியல் சேவைகளைப் பற்றியும், சிறந்த நிதியியல் நடைமுறைகளைப் பற்றியும், டிஜிட்டல்மயமாக்குதல் பற்றியும் நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நிதியியல் கல்வியறிவு வாரம் கொண்டாடப்படுகிறது.