சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி (ISA- International Solar Alliance), ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கி (AfDb- African Development Bank), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB- Asian Development Bank), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB- Asian Infrastructure Investment Bank,) பசுமைப் பருவநிலை நிதியம் (GCF- Green climate fund) மற்றும் புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank NDB) ஆகியவை புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை மேம்படுத்துவதற்காக ஒரு கூட்டு நிதியியல் கூட்டிணைவுப் பிரகடனத்தில் (Joint financial partnership Declarations) கையெழுத்திட்டுள்ளன.
புதுப்பிக்கக்கூடிய எரிசக்திக்கான ஆதரவில் தங்களுடைய ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்த சர்வதேச ஆற்றல் நிறுவனம் (The International Energy Agency-IEA), புதுப்பிக்கக் கூடிய ஆற்றலுக்கான சர்வதேச நிறுவனம் ஆகியவை சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியுடன் (ISA) ஓர் கூட்டு கூட்டிணைவுப் பிரகடனத்தில் (Joint partnership Declarations) கையெழுத்திட்டுள்ளன.