இந்திய அரசானது பொருளாதார வல்லுநர்களான ஜெயந்த் R வர்மா, சசாங்க் பிஹைடு மற்றும் ஆசிமா கோயல் ஆகியோரை நிதியியல் கொள்கைக் குழுவில் (MPC - Monetary Policy Committee) உறுப்பினர்களாக நியமித்துள்ளது.
தற்போதைய MPC ஆனது நிதியியல் கொள்கைக் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் இறுதியாக்கத்தைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் ஏற்படுத்தப் பட்டது.
இந்தக் கட்டமைப்பானது பணவீக்க இலக்கை அறிமுகப்படுத்தியது.
MPC ஆனது வங்கி விகிதம், ரெப்போ விகிதம், தலைகீழ் ரெப்போ விகிதம், நிதி ஒதுக்கீட்டு விகிதம் போன்ற நிதியியல் கூறுகளைப் பயன்படுத்தி நாட்டிற்கான நிதியியல் கொள்கைகளைக் கட்டமைக்கின்றது.
இந்தக் கூறுகள் நிதியியல் கொள்கைக் கூறுகள் எனப்படுகின்றன.