இந்திய தொழில்துறை கூட்டமைப்பானது (Confederation of Indian Industry - CII) மத்திய மற்றும் மாநில அரசின் வரவு செலவுத் திட்டங்களை மதிப்பீடு செய்ய ஒரு நிதியியல் செயல்திறன் குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தக் குறியீடானது வருவாய் செலவுகள், மூலதனச் செலவுகள், வருவாய்கள், நிதியியல் நுட்பம் மற்றும் பொதுக் கடனின் அளவு ஆகியவற்றின் தர மதிப்பீடுகளை உள்ளடக்கியது.
இந்த அறிக்கையின்படி குறைந்த வருமானம் உடைய மாநிலங்களின் நிதி செயல்திறனானது அதிக வருமானமுடைய மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது.