நிதியியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவைத் தொடர்ந்து முன்னேற்றமடையச் செய்வதற்காகவும், எதிர்கால உத்தி மற்றும் கொள்கை முயற்சிகளை கட்டமைப்பதற்காகவும் விரிவான நிதியியல் உள்ளடக்கத்தை மேற்கொள்ளும் முயற்சிகளுக்காகவும் நிதி ஆயோக்கானது ஒரு நாள் நடைபெறக் கூடிய நிதியியல் தொழில்நுட்ப மாநாட்டை புது தில்லியில் நடத்தியது.
இந்த மாநாட்டை நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் காந்தின் முன்னிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்தி காந்த தாஸ் தொடங்கி வைத்தார்.
டிஜிட்டல் பண வழங்கீடுகள் மற்றும் நிதியியல் தொழில்நுட்பத்தின் மூலமாக நிதியியல் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதை மேலும் முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வதற்காக நந்தன் நீலேகனியின் தலைமையில் 5 நபர்கள் கொண்ட குழுவை இந்திய ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.