- புது தில்லியில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Financial Stability and Development Council - FSDC) 19வது சந்திப்பு நடைபெற்றது.
- இந்த ஆணையமானது தற்போதைய உலக மற்றும் உள்நாட்டுப் பொருளாதார நிலைமை மற்றும் நிதித்துறை செயல்பாடு ஆகியவை குறித்து ஆய்வு செய்தது. மேலும் இந்த ஆணையமானது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் நிதி நிலைமை மற்றும் பரஸ்பர நிதிகள் உள்ளிட்ட உண்மை வட்டி விகிதம் மற்றும் தற்போதைய நிதி நிலைமை தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் விவாதித்தது.
நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு ஆணையம்
- நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது நாட்டின் பொருளாதாரத்தின் நிதியியல் அமைப்பை ஆரோக்கியமாகவும் சிறந்ததாகவும் ஏற்படுத்தும் ஒழுங்குமுறை நிதியியல் துறையாகும்.
- இந்த ஆணையத்திற்கு மத்திய நிதி அமைச்சர் தலைமை வகிப்பார். மேலும்
- நிதித்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர்கள் (i.e. ஆர்பிஐ, செபி, ஐஆர்டிஏஐ மற்றும் பிஎப்ஆர்டிஏ அல்லது RBI, SEBI, IRDAI, PFRDA)
- நிதித்துறை செயலாளர்
- பொருளாதார விவகாரத் துறைச் செயலாளர் (மத்திய நிதித் துறை )
- நிதிச் சேவைகள் துறை செயலாளர் (மத்திய நிதித் துறை )
- தலைமைப் பொருளாதார ஆலோசகர்
- ஆகியோர் இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆவர்.
- நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தனது சந்திப்பின்போது தேவை ஏற்பட்டால் வல்லுநர்களையும் அழைக்கும்.