TNPSC Thervupettagam

நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழு

May 27 , 2018 2375 days 760 0
  • நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுவினை மத்திய அரசு மீண்டும் அமைத்துள்ளது. இக்கழகம் வருவாய்த்துறை செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சக செயலாளர்கள் ஆகியோரை கொண்டிருக்கும்.
  • மேலும் இக்குழுவானது இந்திய திவால் வாரியத்தின் (Insolvency and Bankruptcy Board of India - IBBI) தலைவரையும் உள்ளடக்கும்.
  • நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுவானது நிதியியல் துறையை முறைப்படுத்தும் சிறப்பு ஒழுங்குமுறை அமைப்பாகும். நாட்டின் பொருளாதாரத்தில் திறனான மற்றும் ஆரோக்கியமான நிதியியல் அமைப்பினை ஏற்படுத்துவதற்கு முக்கியமான ஒன்றாக இவ்வமைப்பு கருதப்படுகிறது.
  • நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுவின் தலைவர் மத்திய நிதியமைச்சராவார். நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுவானது 2010 ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சரான பிரணாப் முகர்ஜி அவர்களால் அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்