TNPSC Thervupettagam

நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு ஆணையம்

November 17 , 2019 1708 days 608 0
  • நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Financial Stability and Development Council - FSDC) 21வது கூட்டமானது சமீபத்தில் நடத்தப்பட்டது.
  • இது நிதி சார்ந்த கல்வியறிவு மற்றும் நிதியியல் உள்ளடக்கல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • FSDC ஆனது 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தலைவர் மத்திய நிதி அமைச்சர் ஆவார்.
  • இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் பின்வருமாறு:
    • நிதித் துறை ஒழுங்குமுறை நிறுவனங்களின் தலைவர்கள் (ரிசர்வ் வங்கி, இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை),
    • நிதித் துறைச் செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை,
    • செயலாளர், நிதிச் சேவைகள் துறை,
    • தலைமைப் பொருளாதார ஆலோசகர்,
    • நொடித்தல் மற்றும் திவால் வாரியத்தின் தலைவர்.
  • FSDCன் துணைக் குழுவானது ரிசர்வ் வங்கியின் ஆளுநரால் தலைமை தாங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்