மக்களவையானது 2025 ஆம் ஆண்டு நிதியியல் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 35 அரசாங்க திருத்தங்கள் அடங்கும்.
2025-26 ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையானது மொத்தம் 50.65 லட்சம் கோடி ரூபாய் செலவினத்தினை மதிப்பிட்டுள்ளது என்பதோடு தற்போதைய நிதியாண்டை விட இது 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
அடுத்த நிதியாண்டில் முன்மொழியப்பட்ட மொத்த மூலதனச் செலவினம் ஆனது 11.22 லட்சம் கோடி ரூபாய் ஆகும் என்ற நிலையில் பயனுள்ள மூலதனச் செலவினமானது இதில் 15.48 லட்சம் கோடி ரூபாயாகும்.
மொத்த வரி வருவாய் வசூல் 42.70 லட்சம் கோடி ரூபாயாகவும், மொத்தக் கடன் 14.01 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என முன் மொழியப்பட்டுள்ளது.
2026 ஆம் நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறையானது, நடப்பு நிதியாண்டில் உள்ள 4.8 சதவீதத்திற்குப் பதிலாக 4.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு நிதியியல் மசோதாவின் புதியக் கட்டமைப்பின் கீழ், ஒரு நபர் வரி விதிப்பிற்குத் தகுதியான வருமானம் அல்லது இணைய சங்கேதப் பணப் பங்குகளை மறைத்து விட்டதாக என கருதினால் வரி அதிகாரிகள் மறைகுறியாக்கப்பட்டத் தகவல் தொடர்புகள், மேகக் கணிமைச் சேமிப்பு மற்றும் எண்ணிம சொத்துப் பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை அணுகலாம்.