TNPSC Thervupettagam

நிபா வைரஸ் பாதிப்பு

May 24 , 2018 2248 days 1105 0
  • மிகவும் மற்றும் கொடிய உயிர் கொல்லி நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கேரளா மாநிலத்தில் முதன் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • நிபா வைரஸ் பாதிப்பானது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக் கூடிய நோயாகும். இவை மனிதர்கள் மற்றும் விலங்குகளில் மோசமான நோய்களை உண்டாக்க வல்லவை.

  • டீரோபஸ் இனத்தின் டீரோபோடைடியே குடும்பத்தைச் சேர்ந்த பழந்தின்னி வௌவால் இந்த வைரஸ்களின் இயற்கை உறைவிடத் தாங்கிகளாகும்.
  • இந்த வைரஸின் தாக்குதலானது முதலில் 1998 ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள கம்பங் சுன்கய் நிமா எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்த வைரசானது காற்றின் வழியே பரவாது. ஆனால் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட வெளவால்கள் மற்றும் பன்றிகளுடனான நேரடித் தொடர்பின் மூலம் இந்த வைரஸ் பரவ வல்லது.
  • நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களினால் மனிதர்களிடையேயும் இந்த வைரஸ் பரவும்.
  • கடுமையான சுவாசக் கோளாறுகள், மூச்சுத் திணறல், மூளை வீக்கம், காய்ச்சல், தலைவலி, சோர்வு, வலிப்பு (delirium) ஆகியவற்றை இது ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட நோயாளி 48 மணி நேரத்தில் கோமா நிலையையும் அடைய வாய்ப்புள்ளது.

   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்