TNPSC Thervupettagam

நிப்பான் இந்தியா நிஃப்டி ஆட்டோ ETF

January 6 , 2022 1055 days 524 0
  • நிப்பான் லைஃப் இந்தியா சொத்து மேலாண்மை நிறுவனமானது நிப்பான் இந்தியா நிஃப்டி ஆட்டோ ETF (exchange-traded funds) என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்குவதாக அறிவித்தது.
  • இது இந்தியாவில் இம்மாதிரியிலான முதல் வகையாகும்.
  • இந்தப் புதிய நிதி அளிப்புகளானது 2022 (The New Fund Offer) ஆம் ஆண்டு ஜனவரி 05 அன்று தொடங்கி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று நிறைவடைகின்றன.
  • இதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1000 ஆகும்.
  • அதன் பிறகு முதலீட்டாளர்கள் ஒரு ரூபாயின் மடங்குகளில் இதில் முதலீடுகளைச் சேர்க்கலாம்.
  • நிப்பான் இந்தியா நிஃப்டி ஆட்டோ ETF (பரிமாற்ற வர்த்தக நிதி) என்பது நிஃப்டி ஆட்டோ குறியீட்டினை ஒத்திருக்கும் ஒரு திறந்தவெளி திட்டமாகும்.
  • இது 15 முன்னணி நிறுவனங்களுக்கான (நிஃப்டி ஆட்டோ குறியீடு செயல்முறைப்படி) வெளிப்பாட்டினை வழங்கும் ஒரு குறியீட்டினைப் போன்ற விகிதத்தில் உள்ள நிஃப்டி ஆட்டோ குறியீட்டினை உள்ளடக்கியப் பங்குகளில் முதலீடு செய்யும்.
  • இங்கு நிறுவனம் என்பது 2, 3 (அ) 4 சக்கர வாகனங்கள் மற்றும் வானத் துணைக் கருவிகள் மற்றும் டயர்கள் உள்ளிட்டத் துறைகளை சார்ந்த வாகன நிறுவனங்களைக் குறிக்கச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்