நிமோனியாவிற்கு எதிரான முதல் இந்தியத் தடுப்பூசியை சீரம் இந்திய நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இது தற்போது இந்தியாவின் அனைவருக்குமான நோய்த் தடுப்புத் திட்டத்தின் (Universal Immunization Programme) கீழ் உள்ளது.
லான்செட் இதழின் ஒரு ஆய்வின்படி, நிமோனியா காரணமாக ஏற்படும் குழந்தைகளின் இறப்புகளில் 20% இந்தியாவில் நிகழ்கிறது.
இந்தியாவில் நிமோனியா தொற்றினை அதிகமாகக் கொண்டுள்ள முதல் ஐந்து பங்களிப்பாளர்கள் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஆகும்.