ஐ.நா அமைப்பின் அறிக்கையானது நிமோனியாவை "மறக்கப்பட்டத் தொற்றுநோய்" என்று பெயரிட்டுள்ளது.
பகுதியளவு எண்ணிக்கையிலான நிமோனியா இறப்புகள் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையதாகும்.
நிமோனியாவானது பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பூஞ்சைகளால் ஏற்படுகின்றது. மேலும் குழந்தைகளின் நுரையீரலானது சீழ் மற்றும் திரவத்தால் நிரப்பப்படுவதால் அவர்களை இது சுவாசத்திற்காக போராட வைக்கின்றது.
2018 ஆம் ஆண்டில் நிமோனியா காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
நிமோனியா காரணமாக பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்புகளுக்கு காரணமான ஐந்து நாடுகள் பின்வருமாறு: நைஜீரியா (1,62,000), இந்தியா (1,27,000), பாகிஸ்தான் (58,000), காங்கோ ஜனநாயகக் குடியரசு (40,000) மற்றும் எத்தியோப்பியா (32,000).
இது இப்போது உலகெங்கிலும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 15 சதவீத இறப்புகளுக்கு காரணமாக விளங்குகின்றது.
“நிமோனியாவை வெற்றிகரமாக கையாளுவதற்காக (ஈடு செய்வதற்காக) சமூக விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கை” (SAANS - Social Awareness and Action to Neutralise Pneumonia Successfully - SAANS) என்ற பெயரைக் கொண்ட ஒரு பிரச்சாரத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகமானது குஜராத்தில் தொடங்கியுள்ளது.