TNPSC Thervupettagam

நிமோனியா (நுரையீரல் நோய்) மற்றும் SAANS

November 24 , 2019 1830 days 730 0
  • ஐ.நா அமைப்பின் அறிக்கையானது நிமோனியாவை "மறக்கப்பட்டத் தொற்றுநோய்" என்று பெயரிட்டுள்ளது.
  • பகுதியளவு எண்ணிக்கையிலான நிமோனியா இறப்புகள் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையதாகும்.
  • நிமோனியாவானது பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பூஞ்சைகளால் ஏற்படுகின்றது. மேலும் குழந்தைகளின் நுரையீரலானது சீழ் மற்றும் திரவத்தால் நிரப்பப்படுவதால் அவர்களை இது சுவாசத்திற்காக போராட வைக்கின்றது.
  • 2018 ஆம் ஆண்டில் நிமோனியா காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • நிமோனியா காரணமாக பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்புகளுக்கு காரணமான ஐந்து நாடுகள் பின்வருமாறு: நைஜீரியா (1,62,000), இந்தியா (1,27,000), பாகிஸ்தான் (58,000), காங்கோ ஜனநாயகக் குடியரசு (40,000) மற்றும் எத்தியோப்பியா (32,000).
  • இது இப்போது உலகெங்கிலும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 15 சதவீத இறப்புகளுக்கு காரணமாக விளங்குகின்றது.
  • “நிமோனியாவை வெற்றிகரமாக கையாளுவதற்காக (ஈடு செய்வதற்காக) சமூக விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கை” (SAANS - Social Awareness and Action to Neutralise Pneumonia Successfully - SAANS) என்ற பெயரைக் கொண்ட ஒரு பிரச்சாரத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகமானது குஜராத்தில் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்