TNPSC Thervupettagam

நிமோனியா பாதிப்பினைச் சுழிய நிலையாக்குவதற்கான விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கை

April 23 , 2022 821 days 333 0
  • கர்நாடகாவின் சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர் K. சுதாகர், நிமோனியா பாதிப்பினைச் சுழிய நிலையாக்குவதற்கான ஒரு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கை பிரச்சாரத்தினை வெற்றிகரமாகத் தொடங்கி வைத்தார்.
  • இது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடம் ஏற்படும் நிமோனியா பாதிப்பு குறித்த ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், அதை முன்கூட்டியே கண்டறிதலை உறுதி செய்யவும் வேண்டி தொடங்கப்பட்ட ஒரு பிரச்சாரமாகும்.
  • நிமோனியா என்பது வைரஸ், பாக்டீரியா (அல்லது) பூஞ்சைத் தொற்றின் காரணமாக ஏற்படும் ஒரு நுரையீரல் தொற்றாகும்.
  • கர்நாடகாவிலுள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு வீதமானது 1000 பிறப்பிற்கு 28 என்ற அளவில் உள்ளதாக 2018 ஆம் ஆண்டின் மாதிரிப் பதிவு முறைத் தரவுகள் கூறுகின்றன.
  • தேசிய சுகாதாரக் கொள்கை இலக்குகளை அடைவதற்கு நிமோனியா உயிரிழப்பு வீதமானது 1000 பிறப்புகளுக்கு 3 உயிரிழப்புகளுக்கும் குறைவான அளவில் குறைக்கப் பட வேண்டும்.
  • இந்தியாவில், குழந்தைகள் மத்தியில் ஏற்படும் நிமோனியா பாதிப்பானது நாட்டில் பதிவாகும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புகளில் 15% பங்கினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்