பரவலாக விலங்குகளுக்கான வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் நிம்சுலைடு மருந்தின் அனைத்து வடிவங்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை மத்திய அரசு தடை செய்துள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஆனது, 1940 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழலின் சமநிலையைப் பேணுவதற்கு அவசியமான கழுகுகள் மற்றும் பிற பிணந்திண்ணி இனங்களைப் பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிம்சுலைடு மருந்து ஆனது கால்நடைகள், பன்றிகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு வலி நிவாரணியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருந்தின் உருவாக்க முறைமையானது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பயன்பாட்டிற்கு வேறுபடுகின்றன.
பல்வேறு பாதுகாப்புக் காரணங்களுக்காக ஏற்கனவே பல நாடுகளில் குழந்தைகளில் நிம்சுலைடு மருந்தினைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.