நிம்பஸ் திட்டம் என்பது இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு மேகக் கணிம சேவைகளை வழங்குவதற்காக 2021 ஆம் ஆண்டில் கூகிள் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்முறை ஒப்பந்தம் ஆகும்.
இது சுகாதாரம், போக்குவரத்து மற்றும் கல்வி போன்ற நாட்டின் பல்வேறு துறைகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இஸ்ரேலுக்குப் பொதுப் பயன்பாட்டு மேகக் கணிம சேவைகளை வழங்குகிறது.
இஸ்ரேல் நாட்டின் அரசு ஊழியர்கள் மற்றும் நாட்டின் மூத்த தலைவர்களுக்கும் அவர்களது எண்ணிம திறனை மேம்படுத்துவதற்காக பயிற்சியும் வழங்கப்படுகிறது.