சமீபத்தில் பிரெஞ்சுப் பிரதேசமான நியூ கலிடோனியா ஆனது பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக வேண்டி நடத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பில் அதற்கு எதிராக வாக்களித்து உள்ளது.
இந்த வாக்கெடுப்பானது நொவ்மியா ஒப்பந்தம் எனப்படும் 1998 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு காலணியாதிக்க நீக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
நியூ கலிடோனியா என்பது தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிரான்சின் ஒரு சிறப்புப் பிரதேசம் மற்றும் ஒரு தீவுக் கூட்டமாகும்.
அங்கு கணக்ஸ் என்ற பூர்வ குடிமக்கள் மொத்த மக்கள் தொகையில் 39% ஆக உள்ளனர். மேலும் அங்கு ஐரோப்பியக் குடியிருப்பாளர்கள் (கேல்டோச்சஸ்) 27% என்ற அளவில் உள்ளனர்.
நியூ கலிடோனியா ஆனது தனது பூர்வகுடி கணக்ஸ் மக்கள் மற்றும் ஐரோப்பியர்கள் ஆகியோருக்கிடையே மிகப்பெரிய பிளவைக் கொண்டுள்ளது. அங்கு கணக்ஸ் மக்கள் விடுதலைக்கு ஆதரவாகவும் ஐரோப்பியர்கள் அந்த விடுதலைக்கு எதிராகவும் உள்ளனர்.
வரலாறு
நியூ கலிடோனியா பகுதியானது பிரிட்டனைச் சேர்ந்த கடற் பயணியான ஜேம்ஸ் குக் என்பவரால் 1774 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது 1853 ஆம் ஆண்டில் பிரான்சுடன் இணைக்கப்பட்டது.
1946 ஆம் ஆண்டில், நியூ கலிடோனியாவானது ஒரு அயல்நாட்டுப் பிரதேசமாக உருவெடுத்தது.
1953 ஆம் ஆண்டு வாக்கில், பிரெஞ்சுக் குடியுரிமையானது பூர்வ குடி என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து நியூ கலிடோனியா மக்களுக்கும் வழங்கப் பட்டு உள்ளது.