TNPSC Thervupettagam

நியூ ஹாரிசான் விண்கலம்

January 1 , 2019 2027 days 654 0
  • நாசாவின் நியூ ஹாரிசான் விண்கலமானது பூமியிலிருந்து 4 பில்லியன் மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள மர்மமான கோளான அல்டிமா துலேவை ஆய்வு செய்யும் முதலாவது விண்கலமாக உருவெடுத்துள்ளது.
  • இது மிகவும் பழமையான மற்றும் மனித குலத்தால் இதுவரை ஆய்வு செய்யப்படாமல் இருந்த அண்டப் பகுதி மற்றும் வெகு தொலைவில் உள்ள இலக்கு ஆகியவற்றை ஆய்வு செய்து வரலாற்றுச் சாதனை படைத்த ஒரு விண்வெளித் திட்டமாகும்.

அல்டிமா துலே

  • அல்டிமா துலேவானது நெப்டியுனின் சுற்றுவட்டப் பாதைக்கு அப்பால் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள குய்ப்பர் பட்டையில் (Kuiper belt) அமைந்துள்ளது.
  • இது சுமார் 30 கிலோ மீட்டர் விட்டத்தையும் ஒரு ஒழுங்கற்ற வடிவத்தையும் கொண்டுள்ளது.
  • அல்டிமா துலேவானது பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் ஹைட்ரோ கார்பனின் வெளிப்பாட்டின் காரணமாக சிவப்பு நிறத்தில் உள்ளது.
  • அல்டிமா துலேவானது “கூல் கிளாசிகல்ஸ்” என்று அழைக்கப்படும் “குய்ப்பர் பட்டை” வகைப் பொருட்களின் ஒரு வகையைச் சார்ந்தது ஆகும். இந்த “கூல் கிளாசிகல்ஸானது” சூரிய சுழற்சிக்கான குறைவான சாய்வுகளுடன் ஒரு வட்டமான சுற்றுவட்டப் பாதையைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்