இந்தியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட கூட்டு அணியானது (Joint Team) “கங்கை நதிப் படுகையில் நிலத்தடி நீர் ஆர்சனிக் ஆராய்ச்சி” (Ground Water Arsenic Research in Ganga Basin) திட்டத்திற்காக நியூட்டன்-பாபா நிதியத்தை (Newton Bhabha Fund) வென்றுள்ளது.
இங்கிலாந்தின் தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் குழுவுடன் இணைந்து இந்தியாவின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது இத்திட்டத்தினை கூட்டாக மேற்கொண்டுள்ளது.
பரவலாக ஆர்சனிக் கலப்பால் பாதிக்கப்பட்ட கங்கை நதிப் படுகையில் எதிர்கொள்ளப்படும் நீர் பயன்பாடு தொடர்பான சவால்களுக்கு தீர்வு காண்பதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
மொத்தம் மூன்று இடங்களில், அதாவது உத்திரப் பிரதேசத்திலுள்ள பிஜ்னோர் (Bijnor) மற்றும் வாரணாசியிலும், மேற்கு வங்கத்திலுள்ள நாதியா (Nadia)-விலும் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆர்சனிக் நஞ்சாதலால் (arsenic poisoning) ஏற்படும் பிரச்சனைகளை மதிப்பிடல், ஆர்சனிக் நஞ்சாதலால் அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளில் ஏற்பட உள்ள தீமைகளைப் பற்றி புரிந்து கொள்ளுதல், மேலும் நிலத்தடி நீர் மேலாண்மை நடைமுறையின் மீது அவற்றினுடைய தாக்கம், மற்றும் நஞ்சுக் கலப்பை நீக்கத் தேவையான நீர் சுத்திகரிப்பு தொழிற்நுட்பங்களை பரிந்துரைத்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
இந்த நிதியானது பிரிட்டிஷ் குழுவால் வழங்கப்படுகின்றது..
இங்கிலாந்து மற்றும் வளரும் சக்தி வாய்ந்த நாடுகளுக்கிடையேயான அறிவியல் மற்றும் புத்தாக்கக் கூட்டிணைவிற்கு ஆதரவு வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட இங்கிலாந்தின் 375 மில்லியன் யூரோ நியூட்டன் நிதியத்தின் ஒரு பகுதியே இத்திட்டமாகும்.