12 பில்லியன் முதல் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான நூறாயிரக்கணக்கான வெவ்வேறு நட்சத்திரங்கள் இங்கு காணப்படுகின்றன.
டெர்சான் 5 என்பது பால் வெளி அண்டத்தில் மிகவும் திரள்கள் நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும் என்பதோடு இங்கு ஏற்கனவே குறைந்தது 39 அறியப்பட்ட துடிப்பண்டங்கள் திரண்டு காணப்படுகின்றன.
மூன்று புதிய அரிய ஸ்பைடர் துடிப்பண்டங்களும் இந்தப் பகுதியில் கண்டறியப்பட்டு உள்ளன.
அவை "ரெட்பேக்ஸ்" அல்லது "பிளாக் விடோவ்ஸ்" என வகைப்படுத்தப்படுகின்றன என்பதோடு அவை மிக அருகில் வரும் நட்சத்திரங்களின் மீது உயர் ஆற்றல் கதிர்வீச்சு "தாக்கத்தினை" செலுத்துகின்றன.
ரெட்பேக் ஸ்பைடர் துடிப்பண்டங்கள் ஆனது, சூரியனின் நிறையில் 10 சதவீதம் முதல் சுமார் 50 சதவீதம் வரையிலான நிறை கொண்ட பல்வேறு துணை நட்சத்திரங்களை உள்ளிழுக்கின்றன.
பிளாக் விடோவ்ஸ் ஸ்பைடர் துடிப்பண்டங்கள் சூரியனின் நிறையில் சுமார் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான நிறை கொண்ட பல்வேறு சிறிய நட்சத்திரங்களை உள் இழுக்கின்றன.