நியூராலிங்க் எனப்படும் புத்தொழில் நிறுவனமானது, "நம்பிக்கைக்குரிய" ஆரம்பகட்ட முடிவுகளுடன் கூடிய மூளை உள்வைப்பை (சில்லுகளை) மனித உடலில் முதல் முறையாக வைத்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் மஸ்க் இணைந்து நிறுவிய நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது மூளைக்கும் கணினிக்கும் இடையே நேரடித் தகவல் தொடர்பு தடத்தினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"லிங்க்" எனப்படும் ஒரு சில்லு ஆனது, உட்காண் அறுவை சிகிச்சை மூலம் மனித மூளைக்குள் வைக்கப்படும் ஐந்து அடுக்கிய நாணயங்களின் அளவிலான ஒரு சாதனம் ஆகும்.