இந்தத் தரவரிசையானது நியூஸ் ஆன்ஏர் செயலியிலுள்ள அனைத்திந்திய வானொலி நேரடி ஒலிபரப்பு சேவைகள் எந்தெந்த நாடுகளில் பிரபலமாக உள்ளது என்பதை தரவரிசைப்படுத்துகிறது.
அமெரிக்கா தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அனைத்திந்திய வானொலியின் தமிழ் மற்றும் தெலுங்கு நேரடி ஒலிபரப்பு சேவைகள் அமெரிக்காவில் பிரபலமாக உள்ளன.
அனைத்திந்திய வானொலியின் (All India Radio – AIR) பஞ்சாபி ஒலிபரப்பு சேவையானது ஐக்கிய ராஜ்ஜியத்தில் பிரபலமாக உள்ளது.
உலகளவில் (இந்தியா தவிர) AIR நியூஸ் 24 x 7 என்ற அலைவரிசையானது 7 ஆம் இடத்திலிருந்து 6 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதே சமயம் AIR தமிழ் ஆனது 6 ஆம் இடத்திலிருந்து 10 ஆம் இடத்திற்குச் சரிந்துள்ளது.
அனைத்திந்திய வானொலியானது (AIR) 1957 ஆம் ஆண்டு முதல் ஆகாஷ்வாணி என அழைக்கப் படுகிறது.