TNPSC Thervupettagam
April 28 , 2019 1910 days 580 0
  • ”நேச்சர் கம்யூனிகேசன்ஸ்” என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, ஆர்ட்டிக்கில் உருகிக் கொண்டிருக்கும் நிரந்தர உறைபனியானது மீத்தேன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு ஆகிய வாயுக்களை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.
  • இது புவி வெப்ப மயமாதலை மிகப்பெரிய அளவில் அதிகப்படுத்தும். மேலும் இது உலகில் டிரில்லயன் டாலர் மதிப்பில் சேதங்களையும் விளைவிக்கும்.
  • நிரந்தர உறைபனி (Permafrost) என்பது குறைந்தது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கடும் குளிர்மிக்க அல்லது முழுமையாக உறைந்த நிலையில் காணப்படும் எந்தவொரு பகுதியையும் குறிப்பதாகும் (32° F அல்லது 0° C).
  • நிரந்தர உறைபனியின் மேற்பகுதியின் மீதுள்ள மண்ணின் அடுக்கானது ஆண்டு முழுவதும் உறைந்த நிலையில் காணப்படுவதில்லை.
  • கோடைக் காலங்களின் போது உருகியும் மற்ற காலங்களில் உறைந்தும் காணப்படுகின்ற இந்த அடுக்கானது ”செயல்பாட்டு அடுக்கு” என்று அழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்