TNPSC Thervupettagam

நிரந்தர சிந்து ஆணையத்தின் 114வது சந்திப்பு

April 2 , 2018 2394 days 1503 0
  • பல்வேறு பிரச்சனைகள் மீது தொழிற்நுட்ப விவாதங்களை நடத்துவதற்கு புது தில்லியில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையேயான நிரந்தர சிந்து நதி ஆணையத்தின் (Permanent Indus Commission - PIC) 114-வது சந்திப்பு அண்மையில் தொடங்கியது.
  • சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் (Indus Waters Treaty-IWT) அமல்பாட்டிற்கான ஒத்துழைப்பு ஏற்பாட்டை (Cooperative Arrangements) ஏற்படுத்துவதும், அதனை பேணிப் பராமரிப்பதும் நிரந்தர சிந்து நதி ஆணையத்தின் கட்டாயப் பணியாகும்.
  • மேலும் சிந்து நதிநீர் அமைப்பின் மேம்பாட்டில் இரு தரப்பினருக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் நிரந்தர சிந்து நதி ஆணையத்தின்  முக்கியப் பணியாகும்.
  • சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளபடி, நிரந்தர சிந்து   ஆணையத்தின்    சந்திப்பானது ஒவ்வொரு ஆண்டும்  குறைந்த பட்சம் ஒரு முறையாவது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் மாறிமாறி நடத்தப்படுகின்றது.
  • இந்த வருடாந்திர சந்திப்பில் இந்தியப் பிரதிநிதிகளின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவுத்துறை  அமைச்சகத்தின்  அதிகாரிகளும்  இந்தியாவின் சிந்து நதிநீர் ஆணையரான (India’s Indus water commissioner)  PK சக்சேனாவும் பங்கேற்றுள்ளனர்.
  • சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகளின் நீர் பங்கீடு தொடர்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தமானது உலக வங்கியின் மத்தியஸ்தத்தோடு 1960 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தமானது ராவி (Ravi), பியாஸ் (Beas), சட்ஜெட் (Sutlej), சிந்து (Indus), செனாப் (Chenab), ஜீலம் (Jhelum) ஆகிய  ஆறு நதிகளை உள்ளடக்கியது
  • சிந்து நதி நீர் ஒப்பந்தமானது அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் (Ayub Khan) ஆகியோரால் 1960ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. இது உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப் பட்டது.
  • இந்த சிந்து நதி மற்றும் அதன் 5 கிளை நதிகளோடு தொடர்புடைய சிந்துநதி நீர் ஒப்பந்தத்தில் இந்நதிகள்  இருவகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தத்தின் படி சட்லெஜ், பியாஸ், ராவி ஆகிய நதிகள் கிழக்கத்திய (Eastern rivers) நதிகளாகும்.
  • ஒப்பந்தத்தின்படி கிழக்கத்திய நதிகளின் அனைத்து நீரும் கட்டுப்பாடற்ற பயன்பாட்டோடு இந்தியாவிற்கு கிடைக்கும்.

  • இந்த ஒப்பந்தத்தின் படி ஜீலம், செனாப், சிந்து நதி ஆகியவை மேற்கத்திய நதிகள் (Western rivers) ஆகும்.
  • இந்நதிகளினுடைய நீர்ப்போக்கை எத்தகு தடையும் செய்யாமல் இந்தியா பாகிஸ்தானிற்கு வழங்க வேண்டும்.

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்