நாட்டிலுள்ள பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான இலக்கை அமுல்படுத்துவதற்காக,இந்திய அரசாங்கம், நிர்பயா நிதி என்ற பிரத்யேக நிதி ஒன்றை அமைத்துள்ளது.
நிர்பயா நிதியின் கீழ் பெறப்பட்ட திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான அதிகாரப் பூர்வ அமைப்பு, பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் (Ministry of Women and Child Development ) ஆகும்.
மத்திய நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட அதிகாரக் குழுவானது (Empowered Committee ) , இந்த நிதியின் கீழ் உருவாக்கப்படும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது.
திட்டங்களை அமல்படுத்துவதற்கான ஒப்புதல் மற்றும் செயலாக்க அனுமதி , சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு வழங்கப்படும்.