உள்நாட்டு தொழிற்நுட்பத்தோடு வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ஏவுகணையான “நிர்பய்” ஏவுகணை ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட சோதனை பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO- Defence Research and Development Organisation) இந்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
“நிர்பய்” இந்தியாவின் குறைந்த தயாரிப்பு செலவுடைய, அனைத்து வானிலைகளிலும் ஏவத்தக்க (All Weather Missile), நீண்ட தூர இலக்குடைய (Long Range),சீர்வேக (Cruise Missile), ரேடாரில் புலப்படா திறனுடைய (Stealth Feature), துல்லியமாக தாக்கவல்ல (high accuracy) ஏவுகணையாகும்.
இவை ஏவுகணை மற்றும் வானூர்தித் தொழிற்நுட்பங்களின் கலப்புத் தொழிற்நுட்பத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால் ஏவுகணைகளைப் போல நெடுவாக்கிலும், விமானங்களைப் போல கிடைமட்டமாகவும் எழும்பிட வல்லது..
இவை ஒற்றை வான் ஏவல் பயணத்தினிலே பல இலக்குகளை அழிக்கவல்லது.
GPS தொழிற்நுட்பமுடைய இந்த ஏவுகணை கடைசி 5 வருடங்களில் பரிசோதிக்கப்படுவது இது 5-வது முறையாகும்.
இவை 300 KG எடையுள்ள ஆயுதங்களை சுமந்து செல்லத்தக்கது.
இவற்றின் வேகம் 6 முதல் 0.7 மாக் வரை(குறையொலி வேகம் -சப் சோனிக்)
இவை 1000 கி.மீ ஐ விட அதிகமான நீண்ட தூர இலக்கு வரம்புடையவை .
நிர்பய் ஏவுகணையானது அமெரிக்காவின் தோமஹவ்க் ஏவுகனைகளின் (Tomahawk Missiles) இந்திய பிரதியாகும்.
இந்த ஏவுகணை நீர்,நிலம், வான்வெளி என பலதரப்பு ஏவு மேடைகளிலிருந்தும் ஏவத்தக்கது,
தகவல் துளிகள்
ஒலியின் அலகு-மாக்(Mach)
மீயொலி வேகம் (super Sonic)
ஒரு மாக்-ஐ விட அதிகமான அலகுடைய எவ்வேகமும் மீயொலி வேகம் எனப்படும்.
குறையொலி வேகம் (Sub Sonic)
ஒளியின் வேகத்தை விட குறைவான எவ்வேகமும் குறையொலி வேகம் (Sub-sonic) எனப்படும்.
சீர்வேக ஏவுகணை (Cruise Missile)
வான் வழிப்பயணத்தின் பெரும் பகுதியை வளிமண்டலத்தினுள்ளே கொண்டு ஒரே சீரான வேகத்தில் பயணிக்கும் ஓர் வழிகாட்டு அமைப்புடைய ஏவுகணையே சீர்வேக ஏவுகணையை எனப்படும்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (Ballistic Missile)
வான் வழிப்பயணத்தின் பெரும்பகுதியை வளிமண்டலத்திற்கு வெளியே கொண்ட, கண்டங்களுக்கு இடையேயான பெருந்தொலைவுப் பயணப்பாதை உடைய, வழிகாட்டும் அமைப்புடைய ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எனப்படும்.