TNPSC Thervupettagam

நிர்பய் ஏவுகணை

November 8 , 2017 2445 days 1028 0
  • உள்நாட்டு தொழிற்நுட்பத்தோடு வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ஏவுகணையான “நிர்பய்” ஏவுகணை ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட சோதனை பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO- Defence Research and Development Organisation) இந்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • “நிர்பய்” இந்தியாவின் குறைந்த தயாரிப்பு செலவுடைய, அனைத்து வானிலைகளிலும் ஏவத்தக்க (All Weather Missile), நீண்ட தூர இலக்குடைய (Long Range),சீர்வேக (Cruise Missile), ரேடாரில் புலப்படா திறனுடைய (Stealth Feature), துல்லியமாக தாக்கவல்ல (high accuracy) ஏவுகணையாகும்.
  • இவை ஏவுகணை மற்றும் வானூர்தித் தொழிற்நுட்பங்களின் கலப்புத் தொழிற்நுட்பத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால் ஏவுகணைகளைப் போல நெடுவாக்கிலும், விமானங்களைப் போல கிடைமட்டமாகவும்  எழும்பிட வல்லது..
  • இவை ஒற்றை வான் ஏவல் பயணத்தினிலே பல இலக்குகளை அழிக்கவல்லது.
  • GPS தொழிற்நுட்பமுடைய இந்த ஏவுகணை கடைசி 5 வருடங்களில் பரிசோதிக்கப்படுவது  இது  5-வது முறையாகும்.
  • இவை 300 KG எடையுள்ள ஆயுதங்களை சுமந்து செல்லத்தக்கது.
  • இவற்றின் வேகம் 6  முதல் 0.7 மாக் வரை(குறையொலி வேகம் -சப் சோனிக்)
  • இவை 1000  கி.மீ  ஐ விட அதிகமான நீண்ட  தூர இலக்கு வரம்புடையவை .
  • நிர்பய் ஏவுகணையானது அமெரிக்காவின் தோமஹவ்க் ஏவுகனைகளின் (Tomahawk Missiles) இந்திய பிரதியாகும்.
  • இந்த ஏவுகணை நீர்,நிலம், வான்வெளி என பலதரப்பு ஏவு மேடைகளிலிருந்தும் ஏவத்தக்கது,
தகவல் துளிகள்
  • ஒலியின் அலகு-மாக்(Mach)
மீயொலி வேகம் (super Sonic)
  • ஒரு மாக்-ஐ விட அதிகமான அலகுடைய  எவ்வேகமும் மீயொலி வேகம் எனப்படும்.
குறையொலி வேகம் (Sub Sonic)
  • ஒளியின் வேகத்தை விட குறைவான எவ்வேகமும் குறையொலி வேகம் (Sub-sonic) எனப்படும்.
சீர்வேக ஏவுகணை (Cruise Missile)
  • வான் வழிப்பயணத்தின் பெரும் பகுதியை வளிமண்டலத்தினுள்ளே கொண்டு ஒரே சீரான வேகத்தில் பயணிக்கும் ஓர் வழிகாட்டு அமைப்புடைய ஏவுகணையே சீர்வேக ஏவுகணையை எனப்படும்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (Ballistic Missile)
  • வான் வழிப்பயணத்தின் பெரும்பகுதியை வளிமண்டலத்திற்கு வெளியே கொண்ட, கண்டங்களுக்கு இடையேயான பெருந்தொலைவுப் பயணப்பாதை உடைய, வழிகாட்டும் அமைப்புடைய ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எனப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்