நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்து வரலாறு படைத்துள்ளார்.
இதன் மூலம், வெவ்வேறு காலக் கட்டங்களில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் தாக்கல் செய்த 10 நிதிநிலை அறிக்கை என்ற சாதனையை திருமதி நிர்மலா நெருங்க உள்ளார்.
ஒரே பிரதமரின் கீழ் தொடர்ந்து எட்டு நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்து, தொடர்ச்சியாக அதிகபட்ச நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்த சாதனையை அவர் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
ஆனால் தேசாய் 1959 முதல் 1964 ஆம் ஆண்டு வரை நிதியமைச்சராக இருந்த ஒரு காலத்தில் மொத்தம் 6 நிதிநிலை அறிக்கைகளையும், 1967 மற்றும் 1969 ஆகிய இரு ஆண்டுகளுக்கு இடையில் 4 நிதிநிலை அறிக்கைகளையும் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர்கள் P. சிதம்பரம் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோர் முறையே ஒன்பது மற்றும் எட்டு நிதிநிலை அறிக்கைகளை வெவ்வேறு பிரதமர்களின் கீழ் தாக்கல் செய்துள்ளனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய நிதிநிலை அறிக்கையினை 1947 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியன்று நாட்டின் முதல் நிதியமைச்சர் R.K.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் 1991 முதல் 1995 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐந்து நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்தார்.
சீதாராமன் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் தேதியன்று இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த, மிகவும் நீண்ட நேர ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் உரைக்கான சாதனையைப் படைத்துள்ளார்.
1977 ஆம் ஆண்டில் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் ஆற்றிய ஒரு இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் உரையானது வெறும் 800 சொற்களுடன் இதுவரையில் ஆற்றப்பட்ட மிகக் குறுகிய உரையாக கூறப்படுகிறது.
மார்ச் மாத இறுதிக்குள் பாராளுமன்ற ஒப்புதல் செயல்முறையை அரசாங்கம் நிறைவு செய்ய அனுமதிக்கும் வகையில், நிதிநிலை அறிக்கை தாக்கல் தேதியானது 2017 ஆம் ஆண்டில் பிப்ரவரி 01 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.