சண்டிகரில் உள்ள சிறப்பு மத்தியப் புலனாய்வு நீதிமன்றமானது, 'நீதிபதியின் வீட்டில் பணம் கண்டறியப்பட்ட' (Cash at Judge’s Door) ஒரு வழக்கில் முன்னாள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் யாதவை விடுவித்துள்ளது.
2006 ஆம் ஆண்டில், இவர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று 2011 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
2008 ஆம் ஆண்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கௌரின் இல்லத்தில் 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நீதிபதி யாதவுக்கு அனுப்பப்பட வேண்டிய பணமானது, அவர்களின் ஒத்த பெயர்களில் குழப்பம் காரணமாக மற்றொரு நீதிபதியின் இல்லத்திற்கு தவறாக அனுப்பட்டதாகக் கூறப்பட்டது.