மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் நாட்டில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கென்று நிர்யாத் மித்ரா என்ற கைபேசி செயலியை வெளியிட்டு இருக்கின்றது.
இந்த செயலியானது நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்கள் சங்கமான இந்திய ஏற்றுமதி சங்கத்தினர்கள் கூட்டமைப்பால் (Federation of Indian Export Organisation – FIEO) வடிவமைக்கப்பட்டது.
FIEO என்பது வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய தொழில்முனைவோர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் உதவிடுவதற்கு பொறுப்பானதாக இருக்கும் இந்தியாவின் தலைமை வர்த்தக மேம்பாட்டுச் சங்கமாகும்.
இது 1965ம் ஆண்டு புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு, வர்த்தகத்துறை அமைச்சகத்தாலும் தனியார் வர்த்தக மற்றும் தொழிற்துறையாலும் இணைந்து ஏற்படுத்தப்பட்டது.