TNPSC Thervupettagam

நிறுவனக் காப்புத்திறன் குறியீடு 2023

January 24 , 2023 699 days 342 0
  • 2023 ஆம் ஆண்டு நிறுவனக் காப்புத்திறன் குறியீட்டில், முகேஷ் அம்பானி உலக அளவில் 2வது இடத்தையும், இந்திய அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
  • என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஜென்சன் ஹுவாங், உலக அளவில் அதிக மதிப்புமிக்க தலைமை நிர்வாக அதிகாரியாக இடம் பெற்றுள்ளார்.
  • இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா 3வது இடத்தைப் பிடித்து உள்ளார்.
  • அவரைத் தொடர்ந்து அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயண் மற்றும் கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை ஆகியோர் உள்ளனர்.
  • இந்தக் குறியீட்டை பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் தொகுத்து வெளியிடுகிறது.
  • வணிக வெற்றி, நீண்ட கால நிறுவன உருவாக்கம் மற்றும் நிறுவனத்தின் தனிப்பட்ட நற்பெயரைப் பேணிக் காத்தல் ஆகியவற்றின் தேவைகளைச் சமநிலைப்படுத்தும் தலைமை நிர்வாக அதிகாரிகளை இந்த குறியீடானது பாராட்டி அதனைத் தரவரிசைப் படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்