TNPSC Thervupettagam

நிறுவனங்களின் ஆவணக் காப்புப் பெட்டகம்

February 19 , 2025 4 days 34 0
  • மத்திய அரசு ஆனது, ‘நிறுவனங்களின் ஆவணக் காப்புப் பெட்டகம்’ என்ற புதியதொரு எண்ணிமத் தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன் நோக்கம் ஆனது, வணிக மற்றும் நிறுவனங்களின் ஆவணங்களின் நிர்வாக மேலாண்மை மற்றும் சரிபார்ப்பை நெறிப்படுத்துவதற்கானதாகும்.
  • இது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் உள்ள தேசிய மின் ஆளுகைப் பிரிவால் (NeGD) உருவாக்கப்பட்டது.
  • இந்தப் பாதுகாப்பான, மேகக் கணிமை அடிப்படையிலான இயங்குதளமானது, பெரு நிறுவனங்கள், MSME நிறுவனங்கள், அறக் கட்டளைகள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நிறுவனங்களுக்கு உதவுகிறது.
  • இது பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் (MCA), சரக்கு மற்றும் சேவை வரிக் கட்டமைப்பு (GSTN) மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) போன்ற அமைப்புகளுக்கு அத்தியாவசிய ஆவணங்களுக்கான உடனடி அணுகலை வழங்கி, தடையற்ற இணைப்பினை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்