TNPSC Thervupettagam

நிறுவனங்கள் சட்டம், 2013-ஐ திருத்துவதற்கான அவசரச் சட்டம்

November 10 , 2018 2209 days 742 0
  • நிறுவனங்கள் சட்டம் 2013-ஐ திருத்துவதற்காக அவசரச் சட்டம் பிறப்பித்தலுக்கான முன்மொழிதலை மத்திய அமைச்சரவை அங்கீகரித்திருக்கின்றது.
  • இதன்படி, குடியரசுத் தலைவர் ஷரத்து 123-ன் கீழ் ஒப்புதலை தந்திருக்கின்றார். இது பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
  • இந்த சட்டத்தின் திருத்தங்கள் வியாபாரம் செய்வதை எளிமையாக்குவதை மேம்படுத்திடவும் சிறந்த இணக்க நிலைகளை உறுதி செய்திடவும் வேண்டி திட்டமிடப்பட்டு இருக்கின்றது.
  • நிறுவனச் சட்டத்தைத் திருத்துவதற்கான அவசரநிலைச் சட்டம் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயங்களின் மீதான தடைகளை விலக்கவும் நிறுவனங்களின் சிறிய குற்றங்களை குற்றப் பார்வையிலிருந்து நீக்கிடவும் எண்ணுகிறது.
  • இந்த அவசரச் சட்டம் 90 சதவிகித வழக்குகளை தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயங்களிடமிருந்து பெருநிறுவன அமைச்சகத்தின் கீழ் உள்ள பிராந்திய இயக்குநர்களிடம் பரிமாற்றம் செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்