மத்தியப் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சகமானது “நிறுவனங்கள் புதிய தொடக்கத் திட்டம், 2020” என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது “வரையறுக்கப்பட்ட பொறுப்புடைமைப் பங்களிப்புத் திட்டம், 2020” (LLP - Limited Liability Partnerships) என்ற திட்டத்தைப் புதுப்பித்துள்ளது.
இது கோவிட் – 19 தொற்றின் காரணமாகச் சட்டத்தின் படி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் LLP ஆகியவற்றிற்கு நிவாரணம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் கோவிட் – 19 தொற்றினால் ஏற்பட்ட பொதுச் சுகாதார நிலையின் போது முன்னெப்போதும் இல்லாத அளவில் ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைப்பதையும் சலுகைகளை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் நிறுவனங்கள் அல்லது LLPகளினால் தாமதமாகத் தாக்கல் செய்யப்பட்டதற்கான மீண்டும் தாக்கல் செய்யப்பட இருக்கும் கூடுதல் கட்டணத்தை ஒரே தவணையால் தள்ளுபடி செய்கின்றன.
இதுபற்றி
LLP என்பது வரையறுக்கப்பட்ட பொறுப்புடைமையைக் கொண்டுள்ள சில அல்லது அனைத்துப் பங்காளர்களையும் கொண்ட ஒரு பங்காளர் அமைப்பு ஆகும்.
எனவே இது பங்காளர்கள் அல்லது நிறுவனங்களின் கூறுகளை வெளிக் கொணர்கின்றது.
LLPல், ஒரு பங்காளர் மற்றொரு பங்காளரின் தவறான நடத்தை அல்லது தவறான செயலுக்காகப் பொறுப்பாக மாட்டார்.