தமிழக அரசானது, மதம் மற்றும் சமய நிறுவனங்களின் சொத்துக்களை அத்துமீறி அபகரிப்பதை ஜாமீன் பெற இயலாத ஒரு குற்றமாக அறிவித்துள்ளது.
தமிழகச் சட்டமன்றமானது இது தொடர்பான ஒரு மசோதாவினை நிறைவேற்றி உள்ளது.
இந்த மசோதாவானது 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தைத் திருத்த முனைகிறது.
மதம் மற்றும் சமய நிறுவன விவகாரங்களில் ஈடுபாடு உடைய எவரும் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் கோவில் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக புகார் அளிக்க ஒரு வாய்ப்பினை இது அளிக்கிறது.
மதம் மற்றும் சமய நிறுவன விவகாரங்களில் ஈடுபாடு உள்ள எந்தவொரு நபரும் இது தொடர்பாக குற்றவியல் புகார்களை அளிக்கலாம் என்று இது கூறுகிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்படும் வரை கோயில் நிலங்களை அபகரிப்பதற்கு எதிரான புகார்களை பதிவு செய்வதற்கு வேண்டி இந்து சமய அற நிலையத் துறையின் ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் இருந்தது.