UNCCD அமைப்புடன் இணைந்து பருவநிலைத் தாக்க ஆராய்ச்சிக்கான போட்ஸ்டாம் நிறுவனம் ஆனது ‘Stepping back from the precipice: Transforming land management to stay within planetary boundaries’ என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
நில வளம் குன்றல்/நிலச் சீரழிவானது, சுமார் 15 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பு அளவிலான நிலத்தினையும், உலகளவில் 1.2 பில்லியன் மக்களையும் பாதிக்கிறது.
நில வளம் குன்றலின் பொருளாதாரச் செலவினமானது ஆண்டுதோறும் 6.3 முதல் 10.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
ஒன்பது எல்லைகளுள், அறிவியல் ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் மனித குலம் பாதுகாப்பாக செயல்படக் கூடிய ஏழில் நிலம் மையமான ஒன்றாக உள்ளது.