நில வளம் குன்றல் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை
December 20 , 2024 4 days 68 0
முந்தைய 30 ஆண்டு காலத்துடன் (1961-1990) ஒப்பிடும் போது, 2020 ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டுகளில் புவியில் உள்ள நிலத்தில் 77.6 சதவீதம் நிரந்தரமாக வறண்டு விட்டதாக கூறப்படுகிறது.
வறண்ட நிலங்களின் பரப்பளவு சுமார் 4.3 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பில் விரிவடைந்துள்ள நிலையில். இது இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பெரிய பகுதியாகும் என்பதோடு மட்டுமல்லாமல் இது பூமியில் உள்ள அனைத்து நிலங்களிலும் (அண்டார்டிகாவைத் தவிர்த்து) 40.6% பங்கினைக் கொண்டுள்ளது.
தற்போது, 2.3 பில்லியன் மக்கள் வறண்ட நிலங்களில் வசிக்கின்றனர் என்ற நிலையில் இந்த எண்ணிக்கை 2100 ஆம் ஆண்டிற்குள் ஐந்து பில்லியனாக உயரும்.
ஆசியாவில் 1.35 பில்லியன் வறண்ட நில பரப்புகளில் வசிக்கின்றனர் என்ற நிலையில் இது உலகளவிலான மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேலான அளவாகும்.
உலகளவில் வறண்ட நிலத்தில் வசிக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கையின் அடிப்படையில் சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டாக சுமார் 50 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளன.
இதற்கிடையில், ஆப்பிரிக்கக் கண்டத்தின் மக்கள்தொகையில் சுமார் பாதி பேர் (620 மில்லியன் மக்கள்) வறண்ட பகுதிகளில் வாழ்கின்றனர்.
1990 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், பெரும் வறட்சியின் காரணமாக ஆப்பிரிக்க நாடுகள் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 12 சதவீத அளவில் சரிவினை எதிர் கொண்டுள்ளன.
ஆனால் ஆசிய நாடுகளில், அதே காலக் கட்டத்தில் சுமார் 2.7 சதவிகித GDP வீழ்ச்சிக்கு வறட்சியே காரணமாகக் கருதப்பட்டது.