2027 ஆம் ஆண்டு வரையிலான உலக நாடுகளின் நிலக்கரி தேவை, விநியோகம் மற்றும் வர்த்தக போக்குகளை இந்த அறிக்கை கணித்துள்ளது.
சர்வதேச எரிசக்தி முகமை (IEA) ஆனது, உலகளாவிய நிலக்கரி நுகர்வு ஆனது 2024 ஆம் ஆண்டில் 8.7 பில்லியன் மெட்ரிக் டன்களை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது, சீனாவின் மின்சார உற்பத்தியில் சுமார் 60% நிலக்கரியிலிருந்து மட்டுமே மேற்கொள்ளப் படுகிறது.
இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் நிலக்கரியின் தேவைகள் அதிகரித்து வருகின்றன.
உலகளாவிய நிலக்கரி உற்பத்தியானது 2024 ஆம் ஆண்டில் இதுவரையில் இல்லாத அளவிற்கு சாதனை உச்சத்தை எட்டும் என்றும், பின்னர் இந்த நிலையானது 2027 ஆம் ஆண்டில் சீரடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நிலக்கரி உற்பத்தி வளர்ச்சியில் இந்தியா மிகப்பெரியதொரு பங்களிப்பாளராக உள்ளதோடு 2023 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களை தாண்டியது.
இந்திய நிலக்கரி உற்பத்தியானது 2023 ஆம் ஆண்டில் 10% வளர்ச்சியடைந்தது, மேலும், 2024 ஆம் ஆண்டில் 8% உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.